/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சேதமடைந்த கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு சேதமடைந்த கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு
சேதமடைந்த கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு
சேதமடைந்த கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு
சேதமடைந்த கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு
ADDED : ஜூன் 06, 2024 05:32 AM

முதுகுளத்துார், : தினமலர் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அருகே சேதமடைந்துள்ள புதிய கழிவுநீர் கால்வாய் சீரமைக்கப்பட்டது.
முதுகுளத்துார் கீழரத வீதியில் கழிவுநீர் கால்வாய் சேதமடைந்துள்ளதால் கழிவுநீர் செல்ல வழியின்றி வீட்டின் முன்பு தேங்கியதால் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். முதுகுளத்துார் பேரூராட்சி சார்பில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி முன்பு இருந்து கீழரதவீதி வரை புதிதாக கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது.
தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி முன்பு புதிதாக கட்டப்பட்டு சேதமடைந்துள்ள கால்வாயை மட்டும் அகற்றிவிட்டு தற்போது இடத்தில் பள்ளமாக இருப்பதால் தெருக்களில் நடந்து செல்லும் மக்கள் அச்சப்படுகின்றனர்.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சேதமடைந்துள்ள புதிதாக கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் சீரமைக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.