ADDED : ஜூன் 06, 2024 05:29 AM
திருவாடானை : திருவாடானை பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
தென் மாவட்டங்களில் வளிமண்டல கீழடுக்கில் சுழற்சி நிலவுதால் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. திருவாடானை, தொண்டி பகுதியில் கடந்த நான்கு நாட்களாக மேகமூட்டமாக இருந்தது.
நேற்று முன்தினம் பகலில் திருவாடானை, செங்கமடை, அழகமடை, அஞ்சுகோட்டை, சின்னக்கீரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பலத்த மழை பெய்தது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வெப்பத்தின் தாக்கம் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.