/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமேஸ்வரத்தில் 2 மணி நேரம் மின்தடை இருளில் மூழ்கியதால் மக்கள் முற்றுகை ராமேஸ்வரத்தில் 2 மணி நேரம் மின்தடை இருளில் மூழ்கியதால் மக்கள் முற்றுகை
ராமேஸ்வரத்தில் 2 மணி நேரம் மின்தடை இருளில் மூழ்கியதால் மக்கள் முற்றுகை
ராமேஸ்வரத்தில் 2 மணி நேரம் மின்தடை இருளில் மூழ்கியதால் மக்கள் முற்றுகை
ராமேஸ்வரத்தில் 2 மணி நேரம் மின்தடை இருளில் மூழ்கியதால் மக்கள் முற்றுகை
ADDED : ஜூன் 02, 2024 03:26 AM
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் நேற்று முன்தினம் இரவு 2 மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால் மக்கள் இருளில் அவதிப்பட்ட மக்கள் இதனை கண்டித்து இரவில் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தமிழகம் மின்தடை இல்லாத மாநிலமாக மாறி உள்ளது என முதல்வர் ஸ்டாலின் அறிவித்த நிலையில் சுற்றுலாத் தலமான ராமேஸ்வரம் பகுதியில் கடந்த இரு மாதங்களாக தினமும் 3 முதல் 4 மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது.
இதனால் தங்கும் விடுதியில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் ஓய்வெடுக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் வீடுகளில் மின்விசிறி, டி.வி., மின்மோட்டார் இயக்க முடியாமல் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் ராமேஸ்வரம் முழுவதும் இருளில் மூழ்கியது.
இச்சூழலில் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்டில் இறங்கிய பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் கோயிலுக்கு செல்ல அச்சமடைந்தனர். மக்கள் வீடுகளில் துாங்க முடியாமல் தெருக்களில் நடக்கவும் முடியாமல் அவதிப்பட்டனர். இதனை கண்டித்து நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரம் மின்வாரிய அலுவலகம் முன்பு ஹிந்து அமைப்பு நிர்வாகிகள் சரவணன், பிரபாகரன், இந்திய கம்யூ., நகர தலைவர் செந்தில், அ.தி.மு.க., கவுன்சிலர் பிரபாகரன், சமூக ஆர்வலர்கள் பலர் முற்றுகையிட்டனர்.
ராமேஸ்வரம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி சமரசம் செய்து மின்வாரிய அதிகாரியிடம் பேசினார். இதன் பின் அதிகாலை 12:30 மணிக்கு மீண்டும் மின்சாரம் விநியோகிக்கப்பட்டது.