/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமநாதபுரம் போலீஸ் அதிகாரிகளின் உடல் வலிமைக்காக 'முதல் ஓட்டம்' ராமநாதபுரம் போலீஸ் அதிகாரிகளின் உடல் வலிமைக்காக 'முதல் ஓட்டம்'
ராமநாதபுரம் போலீஸ் அதிகாரிகளின் உடல் வலிமைக்காக 'முதல் ஓட்டம்'
ராமநாதபுரம் போலீஸ் அதிகாரிகளின் உடல் வலிமைக்காக 'முதல் ஓட்டம்'
ராமநாதபுரம் போலீஸ் அதிகாரிகளின் உடல் வலிமைக்காக 'முதல் ஓட்டம்'
ADDED : ஜூன் 09, 2024 03:05 AM

ராமநாதபுரம் : -ராமநாதபுரத்தில் போலீஸ்காரர்கள் மற்றும் அதிகாரிகளின் உடல் வலிமை பெறுவதற்காக முதல் ஓட்டம் என்ற நிகழ்ச்சியை சந்தீஷ் எஸ்.பி., துவக்கி வைத்தார்.
போலீசில் பணிபுரியும் போலீஸ்காரர்கள், அதிகாரிகளின் ஆரோக்கியம் மற்றும் உடல் திறனை மேம்படுத்தும் விதமாக மாவட்டம் முழுவதும் அனைத்து உட்கோட்ட தலைமையிடங்களில் முதல் ஓட்டம் என்ற நிகழ்ச்சியில் 3 கி.மீ., நடைப்பயிற்சி மற்றும் ஓட்டப்பயிற்சி நடத்தினர்.
ராமநாதபுரம் சீதக்காதிசேதுபதி விளையாட்டு மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் 1200 போலீசார் பங்கேற்றனர். இதில் 50 முதல் 55 வயது வரை உள்ள போலீசார் ஆர்வமுடன் நடையும், ஓட்டமாக 3 கி.மீ., கடந்தனர். ஓட்டப்பயிற்சியில் சந்தீஷ் எஸ்.பி., பங்கேற்று 3 கி.மீ., ஓடி போலீசாரை உற்சாகப்படுத்தினார்.
சந்தீஷ் எஸ்.பி., கூறுகையில், வாரத்தில் மூன்று முறை 2 கி.மீ., ஓடியும், நடந்தும் நிறைவு செய்யும் போலீஸ் அதிகாரிகள், போலீசாருக்கு வெகுமதிகள் வழங்கப்படும்.
அவர்கள் முறையாக 2 கி.மீ., கடந்தது தொடர்பாக அலைபேசி, ஸ்மார்ட் வாட்ச் மூலம் கண்காணிக்கப்படும் என்றார்.
*திருவாடானை சப்-டிவிஷனில் பணிபுரியும் போலீசாருக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் ஓட்டம் மற்றும் நடை பயிற்சி மேற்கொண்டனர்.
திருவாடானையிலிருந்து சின்னக் கீரமங்கலம் வரை 3 கி.மீ.,பயிற்சியில் ஈடுபட்டனர்.
திருவாடானை டி.எஸ்.பி. நிரேஷ் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
போலீசார் கூறுகையில், அதிக பணி, சரியான நேரத்திற்கு உணவருந்தாதது போன்ற பல காரணங்களால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் நடக்கும் போது நேரம் பார்க்காமல் ஷிப்ட் நேரத்தை தாண்டி பணியாற்றுகிறோம்.
பாதுகாப்புக்கு செல்லும் போது தரமான உணவு கிடைப்பதில்லை. போலீசார் தங்கள் உடலை வலுவாக வைத்திருக்கவும், உடல், ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த பயிற்சி நடக்கிறது என்றனர்.