/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்
ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்
ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்
ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்
ADDED : ஜூலை 23, 2024 04:59 AM

ராமநாதபுரம்: புதிய காவிரி குடிநீர் திட்டப்பணிகளை வேகப்படுத்தி மாவட்டத்தின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என ராமநாதபுரம் மாவட்ட புதிய கலெக்டராக நேற்று பொறுப்பேற்ற சிம்ரன்ஜீத்சிங் காலோன் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக இருந்த விஷ்ணு சந்திரன் சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுத்துறை துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நகராட்சி நிர்வாகஇணை கமிஷனராக இருந்த சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டார்.
அவர் நேற்று ராமநாதபுரம் மாவட்ட 87வது கலெக்டராக பொறுப்பேற்றார்.
அவர் கூறியதாவது:
துாத்துக்குடி சப் -கலெக்டராக 2 ஆண்டுகள்,சென்னை, மதுரை மாநகராட்சியில் கமிஷனராகவும், ஓராண்டு நகராட்சிகள் நிர்வாக இணை கமிஷனராக பணிபுரிந்து தற்போது கலெக்டராக வந்துள்ளேன்.
மாவட்ட மக்களின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உடனடி தீர்வு காணப்படும். விவசாயிகள், மீனவர், நெசவாளர் தொழில் மேம்பட நடவடிக்கை எடுக்கப்படும். ராமேஸ்வரம் சுற்றுலா தளம் என்பதால் கவனம் செலுத்தப்படும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது கரூரில்இருந்து புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பணிகளை வேகப்படுத்தி குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். அரசு திட்டங்கள் மக்களை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும்.
குறைதீர்க்கும் முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். 'கால் யுவர் கலெக்டர்' 83001 75888 என்ற அலைபேசியில் மக்கள் குறைகளை தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ராமநாதபுரம் நகராட்சியில் பாதாள சாக்கடை பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்றார்.
இதையடுத்து குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று மக்களிடம் மனுக்களை பெற்று கோரிக்கை, குறைகளை கலெக்டர் கேட்டறிந்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, உதவி கலெக்டர் பயிற்சி மொகத் இர்பன் உள்ளிட்ட அதிகாரிகள், அலுவலர்கள் கலெக்டருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.