Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமநாதபுரம் வளர்ச்சி திட்டப்பணிகள் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

ராமநாதபுரம் வளர்ச்சி திட்டப்பணிகள் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

ராமநாதபுரம் வளர்ச்சி திட்டப்பணிகள் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

ராமநாதபுரம் வளர்ச்சி திட்டப்பணிகள் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

ADDED : ஜூலை 28, 2024 04:24 AM


Google News
ராமநாதபுரம், : முன்னேற விளையும் ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சிதிட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் கண்காணிப்பு அலுவலர் பங்கஜ் குமார் பன்சால் ஆய்வு செய்தார்.

கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் ஆலோசனை கூட்டம்நடந்தது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பங்கஜ்குமார்பன்சால் தலைமை வகித்தார். கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங்காலோன் முன்னிலை வகித்தார். பங்கஜ் குமார் பன்சால் கூறியதாவது: மாவட்டத்தில் அனைத்துதுறைகளிலும் வளர்ச்சித் திட்டப்பணிகளை செயல்படுத்தவேண்டும்.

மருத்துவ வசதி மிக இன்றியமையாத ஒன்றாகும். அதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான திட்டப் பணிகளை மேம்படுத்த வேண்டும். அங்கன்வாடி மையங்களில் கர்ப்பிணிகள் குழந்தைகள் குறித்த விபரம் பதிவு செய்து அவர்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய வேண்டும்.மருந்து மாத்திரைகள் உரிய காலத்திற்குள் வழங்க வேண்டும். தனிநபர் கடன், குழு கடனுதவி, நகைக்கடன் உதவி என அரசின் திட்டங்கள் மக்களுக்கு வழங்கி பொருளாதாரம் மேம்பட உதவவேண்டும் என்றார்.

மண்டபம், உச்சிபுளி, எட்டிவயல் உள்ளிட்ட இடங்களில்வேளாண் விற்பனை கிடங்கு, மருத்துவமனை, மத்தியகூட்டுறவு வங்கி ஆகிய இடங்களில் பங்கஜ் குமார் பன்சால் ஆய்வு செய்தார்.

பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷா கவுர், உதவி கலெக்டர் (பயிற்சி) மொகத் இர்பான், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ஜீனு, மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் வரதராஜன் உட்பட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us