/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ காட்சிப்பொருளான ஆர்.ஓ., பிளான்ட் கவனியுங்க ஆபீஸர் காட்சிப்பொருளான ஆர்.ஓ., பிளான்ட் கவனியுங்க ஆபீஸர்
காட்சிப்பொருளான ஆர்.ஓ., பிளான்ட் கவனியுங்க ஆபீஸர்
காட்சிப்பொருளான ஆர்.ஓ., பிளான்ட் கவனியுங்க ஆபீஸர்
காட்சிப்பொருளான ஆர்.ஓ., பிளான்ட் கவனியுங்க ஆபீஸர்
ADDED : ஜூலை 28, 2024 04:23 AM
திருப்புல்லாணி : -திருப்புல்லாணி அருகே களிமண்குண்டு கிராமத்தில் 2022ல் அமைக்கப்பட்ட உவர் நீரை நன்னீராக்கும் ஆர்.ஓ., பிளான்ட் ஆறு மாதத்தில் பயன்பாடின்றி காட்சிப் பொருளாக உள்ளது.
களிமண்குண்டு கிராமத்தில் 2022-ல் ரூ.12 லட்சத்தில் உவர் நீரை நன்னீராக மாற்றி கிராம மக்களுக்கு வழங்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. ஒரு குடம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ரூ.5 வீதம் வசூலிக்கப்பட்டு முறையாக பராமரிப்பு செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பயன்பாடில்லாமல் முடங்கியுள்ளது.
களிமண்குண்டு கிராம மக்கள் கூறியதாவது:
களிமண்குண்டு கிராமத்தில் அமைக்கப்பட்ட ஆர்.ஓ., பிளான்ட் நல்ல முறையில் பொதுமக்களுக்கு பயன் தந்து வந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எவ்வித பயன்பாடில்லாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
முறையாக செயல்பட்டு வந்த நிலையில் அவற்றை பராமரிப்பு செய்யாததால் சுத்திகரிப்பு செய்யக்கூடிய மிஷின் துருப்பிடித்து பழுதாகி உள்ளது.
எனவே அரசு நிதி வீணடிப்பை தவிர்க்க திருப்புல்லாணி யூனியன் அதிகாரிகள் பார்வையிட்டு குறைகளை நிவர்த்தி செய்து முன்பு போல் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.