Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதில் சிக்கல்

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதில் சிக்கல்

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதில் சிக்கல்

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதில் சிக்கல்

ADDED : ஜூலை 28, 2024 02:48 AM


Google News
ராமநாதபுரம்:தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் துாய்மைப்பணியாளர் குழந்தைகள் கல்வி பயில்வதற்கு ஆண்டுக்கு 3,500 ரூபாய் உதவித்தொகை முதல் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை வழங்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்பங்களை நிரப்பி, அதில் பெற்றோர் துாய்மைப்பணியாளர் என்பதற்கான சான்று நிறுவனங்களில் பெற்று வழங்க வேண்டும். குறிப்பாக நகராட்சி, பேரூராட்சி, மருத்துவமனைகளில் பெறப்பட்ட சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டு கல்வி உதவித்தொகை அந்தந்த மாணவர்கள் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும்.

ஆனால் 2023, 2024 ஆகிய இரு ஆண்டுகளும் இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை. எமிஸ் தளத்தில் புதிய விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்வதற்கான எந்த ஆப்ஷனும் இல்லை. இதனால் ஏற்கனவே பயன்பெறுவோர் மட்டுமே தொடர்ந்து அதனை பெறுகின்றனர்.

எனவே தமிழக அரசு, கல்வித்துறை, ஆதிதிராவிட நலத்துறை இணைந்து தங்கள் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை பெற புதிதாக விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us