ADDED : ஜூலை 18, 2024 06:10 AM
கமுதி கமுதி அருகே பாம்புல்நாயக்கன்பட்டிக்கு கமுதி துணை மின்நிலையத்திலிருந்து மின்சப்ளை செய்யப்படுகிறது. தற்போது வீடுகளின் அருகே உள்ள மின்கம்பங்களின் அடிப்பகுதி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் மக்கள் அச்சப்பட்டனர்.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கமுதி மின்வாரியத்தினர் பாம்புல்நாயக்கன்பட்டி கிராமத்தில் ஆபத்தான 5 மின்கம்பங்களை புதிதாக மாற்றினர்.