/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ முப்பது ஆண்டிற்கு பின் கைக்கு கிடைத்தது வாய்க்கு எட்டுமா... ஏக்கத்துடன் காட்டுநாயக்கர் மக்கள் முப்பது ஆண்டிற்கு பின் கைக்கு கிடைத்தது வாய்க்கு எட்டுமா... ஏக்கத்துடன் காட்டுநாயக்கர் மக்கள்
முப்பது ஆண்டிற்கு பின் கைக்கு கிடைத்தது வாய்க்கு எட்டுமா... ஏக்கத்துடன் காட்டுநாயக்கர் மக்கள்
முப்பது ஆண்டிற்கு பின் கைக்கு கிடைத்தது வாய்க்கு எட்டுமா... ஏக்கத்துடன் காட்டுநாயக்கர் மக்கள்
முப்பது ஆண்டிற்கு பின் கைக்கு கிடைத்தது வாய்க்கு எட்டுமா... ஏக்கத்துடன் காட்டுநாயக்கர் மக்கள்
ADDED : ஜூலை 18, 2024 06:10 AM

பரமக்குடி : பரமக்குடி நகராட்சி 30-வது வார்டு எம்.ஜி.ஆர்., நகரில் காட்டுநாயக்கர் மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு 30 ஆண்டுகளுக்கு பின் அரசு அதிகாரிகள் தீர்வு ஏற்படுத்திய நிலையில் விரைந்து முடிக்க வேண்டுகோள் விடுத்தனர்.
பரமக்குடி ரயில்வே ஸ்டேஷன் பின்புறம் 30 ஆண்டுகளாக அடிப்படை வசதிகளின்றி எம்.ஜி.ஆர்., நகரில் காட்டுநாயக்கர் மக்கள் குடிசை அமைத்து வாழ்கின்றனர். இவர்கள் வீட்டு வரியை வேந்தோணி ஊராட்சியில் செலுத்தும் நிலையில் ஓட்டளிப்பது முதல் மின் இணைப்பு, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை என நகராட்சி பகுதியில் பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு ரோடு, குடிநீர், மின்விளக்கு வசதிகள் மறுக்கப்பட்ட நிலையில் 2015 செப்., 17 மற்றும் 2020 நவ., 24 என தொடர்ந்து தினமலர் நாளிதழ் இம்மக்களின் பிரச்னைகள் குறித்து சுட்டிக்காட்டி வருகிறது. கடந்த மாதம் கலெக்டர் விஷ்ணு சந்திரன், நகராட்சி மற்றும் ஊராட்சி அதிகாரிகள் குடியிருப்பில் பார்வையிட்டு அடிப்படை வசதிகளை செய்து தருவதாக உறுதி அளித்தனர்.
இது குறித்து சமூக ஆர்வலரான ஆம் ஆத்மி நிர்வாகி முத்துக்குமார் கூறியதாவது: இப்பகுதி மக்களின் அடிப்படை வசதிகள் குறித்து தொடர்ந்து தினமலர் நாளிதழுடன் குரல் கொடுத்து வருகிறேன். தற்போது 30 ஆண்டுகளுக்கு பின் தீர்வு கிடைத்துள்ளது. இதன் மூலம் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ரோடு அமைக்க சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டன.
ஆனால் புதிய மின்கம்பம் அமைத்து தெருவிளக்கு, குடிநீர் குழாய், குளியல் தொட்டி, கழிப்பறை என செய்து தர உறுதியளித்த நிலையில் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
எனவே அனைத்து துறை அதிகாரிகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட்டு கைக்கு எட்டியதை வாய்க்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.