/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பி.எம்.எஸ்., கைத்தறி நெசவு தொழிலாளர் சங்க கூட்டம் பி.எம்.எஸ்., கைத்தறி நெசவு தொழிலாளர் சங்க கூட்டம்
பி.எம்.எஸ்., கைத்தறி நெசவு தொழிலாளர் சங்க கூட்டம்
பி.எம்.எஸ்., கைத்தறி நெசவு தொழிலாளர் சங்க கூட்டம்
பி.எம்.எஸ்., கைத்தறி நெசவு தொழிலாளர் சங்க கூட்டம்
ADDED : ஜூலை 09, 2024 04:48 AM
பரமக்குடி: பரமக்குடியில் பாரதிய மஸ்துார் (பி.எம்.எஸ்.,) கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஊழியர் கூட்டம் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட தலைவர் காசிவிஸ்வநாதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர்கள் ஜெயக்குமார், மோகன்ராம் முன்னிலை வகித்தனர். மாநில பொறுப்பாளர் பாஸ்கரன் பேசினார்.
கைத்தறிவுக்கு ரக ஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும். கைத்தறிக்கு ஜி.எஸ்.டி., ரத்து செய்து விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நெசவாளர்களுக்கு அனைத்து சலுகைகளையும் வங்கி கணக்கில் அரசு செலுத்த வேண்டும்.
இ.எஸ்.ஐ., மருத்துவ வசதி செய்து தர வேண்டும். நிலம் இல்லாத நெசவாளர்களுக்கு காலனி வீடுகள் கட்டித் தர வேண்டும். சங்க உறுப்பினர்களை சேமிப்பு, பாதுகாப்பு திட்டத்தில் சேர்க்க வேண்டும். 60 வயது நெசவாளர்களுக்கு பென்ஷன் ரூ.3000 உயர்த்தி வழங்க வேண்டும்.
விபத்து, இயற்கை மரணம் அடைந்த நெசவாளர்களுக்கு காப்பீடு திட்டம் செயல்படுத்த வேண்டும். மழை நேரங்களில் வாழ்வாதாரம் காக்க பண உதவி வழங்க வேண்டும்.
கைத்தறி துணிகளை கோ-ஆப்டெக்ஸ் முழுமையாக பெற்று விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தி மனு அனுப்பப்பட்டது. கைத்தறி பிரிவு செயலாளர் ராமதாஸ் நன்றி கூறினார்.