/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ இலங்கை சிறையில் வாடும் மீனவர்களைமீட்க முதல்வரை நேரில் சந்திக்க வேண்டும் கலெக்டரிடம் மீனவர்கள் கோரிக்கை இலங்கை சிறையில் வாடும் மீனவர்களைமீட்க முதல்வரை நேரில் சந்திக்க வேண்டும் கலெக்டரிடம் மீனவர்கள் கோரிக்கை
இலங்கை சிறையில் வாடும் மீனவர்களைமீட்க முதல்வரை நேரில் சந்திக்க வேண்டும் கலெக்டரிடம் மீனவர்கள் கோரிக்கை
இலங்கை சிறையில் வாடும் மீனவர்களைமீட்க முதல்வரை நேரில் சந்திக்க வேண்டும் கலெக்டரிடம் மீனவர்கள் கோரிக்கை
இலங்கை சிறையில் வாடும் மீனவர்களைமீட்க முதல்வரை நேரில் சந்திக்க வேண்டும் கலெக்டரிடம் மீனவர்கள் கோரிக்கை
ADDED : ஜூலை 09, 2024 04:49 AM

ராமநாதபுரம்: இலங்கை கடற்படையினர் தமிழக நாட்டுப்படகு மீனவர்களை கைது செய்துள்ளனர். அவர்களை விடுதலை செய்வது குறித்து பேச முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்திக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என நாட்டுப்படகு மீனவர்கள் வலியுறுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்ட அனைத்து நாட்டுப்படகு மீனவர் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் ராயப்பன் தலைமையில் மீனவர் சங்க பிரநிதிகள், மீனவர்கள், அவர்களது குடும்பத்தினருடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில், ஜூலை 1ல் பாம்பன், தங்கச்சிமடம், நம்புதாளை ஆகிய இடங்களிலிருந்து நாட்டுப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது இலங்கை கடற்படையினர் 25 பேரை கைது செய்து 4 படகுகளை பறிமுதல் செய்துள்ளனர். அவர்களை விடுதலை செய்யக்கோரி பலக்கட்ட போராட்டங்கள் நடத்தியும் மத்திய, மாநில அரசுகள், மீன்வளத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
எனவே முதல்வர் ஸ்டாலினை நேரடியாக சந்தித்து முறையிட கலெக்டர் விஷ்ணுசந்திரன் உதவ வேண்டும் என வலியுறுத்தினர்.