/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பிளாஸ்டிக் இல்லாத பள்ளி, கல்லுாரிகள்மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் பிளாஸ்டிக் இல்லாத பள்ளி, கல்லுாரிகள்மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
பிளாஸ்டிக் இல்லாத பள்ளி, கல்லுாரிகள்மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
பிளாஸ்டிக் இல்லாத பள்ளி, கல்லுாரிகள்மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
பிளாஸ்டிக் இல்லாத பள்ளி, கல்லுாரிகள்மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : மார் 14, 2025 07:05 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத பள்ளி, கல்லுாரிகள், வணிக நிறுவனத்தினர் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறையினர் மஞ்சப்பை விருதுகள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
மீண்டும் மஞ்சப்பை பிரசாரத்தை வலியுறுத்தி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படுகிறது. மஞ்சப்பை போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை மீண்டும் உயிர்ப்பித்து, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த தலா மூன்று பள்ளிகள், கல்லுாரிகள், வணிக நிறுவனங்களுக்கு விருது வழங்கப்படும்.
முதல் பரிசு ரூ.10 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.5 லட்சம், மூன்றாம் ரூ.3 லட்சம் வழங்கப்படும். தகுதியுள்ள பள்ளிகள், கல்லுாரிகள், வணிக நிறுவனங்கள் மஞ்சப்பை விருதுகளை பெற விண்ணப்பிக்கலாம். அனைத்து இணைப்புகளிலும் தனிநபர், அமைப்புத் தலைவர் முறையாக கையொப்பமிட வேண்டும்.
விண்ணப்பப் படிவங்கள் சமர்ப்பிக்க மே 1 கடைசி நாள். கலெக்டர் அலுவலக இணையதளம் https://ramanathapuram.nic.in மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இணையதளத்திலும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.--