ADDED : மார் 14, 2025 07:05 AM
கமுதி: கமுதி அருகே ராமசாமிபட்டி கிராமத்தில் நம்மாழ்வார் வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் சார்பில் ஊரக வேளாண் அனுபவ பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ராமசாமிபட்டி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது.
தலைமை டாக்டர் ரமேஷ்குமார் முன்னிலை வகித்தார். முகாமில் ராமசாமிபட்டி அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் பலர் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை பெற்றனர். செவிலியர்கள், கல்லூரி மாணவர்கள், கிராமமக்கள் பலர் இருந்தனர்.