ADDED : ஜூலை 18, 2024 10:38 PM
திருவாடானை: திருவாடானை அருகே சிவகங்கை தேவஸ்தானம் திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் இன்று (ஜூலை 19) ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு புதுக்கோட்டை, சிவகங்கை, பட்டுகோட்டை பகுதியிலிருந்து நேற்று காலை முதல் பக்தர்கள் பாத யாத்திரையாக சென்றனர்.
பாகம்பிரியாள் தாயார், வல்மீகநாதருக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகளில் கலந்து கொள்கின்றனர்.
விழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.