/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ டூவீலரில் வேன் மோதி கல்லுாரி மாணவர் பலி டூவீலரில் வேன் மோதி கல்லுாரி மாணவர் பலி
டூவீலரில் வேன் மோதி கல்லுாரி மாணவர் பலி
டூவீலரில் வேன் மோதி கல்லுாரி மாணவர் பலி
டூவீலரில் வேன் மோதி கல்லுாரி மாணவர் பலி
ADDED : ஜூலை 18, 2024 10:39 PM

பரமக்குடி: பரமக்குடி அருகே ராமநாதபுரம் கல்லுாரி மாணவர் டூவீலரில் சென்ற போது எதிரில் வந்த வேன் மோதி பலியானார்.
பரமக்குடி அருகே குணப்பனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் 19. ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லுாரியில் பி.ஏ., ஆங்கிலம் படித்தார். நேற்று வழக்கம் போல் கல்லுாரி சென்று விட்டு நண்பருடன் டூவீலரில் வீடு திரும்பினார். டூவீலரை விக்னேஷ் ஓட்டினார். அப்போது ராமநாதபுரம் இருவழிச் சாலை தேவேந்திரநல்லுார் பகுதியில் முன்னால் சென்ற அரசு பஸ்சை முந்தி சென்றார். அப்போது மதுரையில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வந்த வேன் டூ வீலரில் மோதியதில் விக்னேஷ் சம்பவ இடத்தில் பலியானார்.
நண்பர் காயத்துடன் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரமக்குடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.