/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மழையில் அங்கன்வாடி மையத்தில் பெயின்ட் அடிக்க மக்கள் எதிர்ப்பு மழையில் அங்கன்வாடி மையத்தில் பெயின்ட் அடிக்க மக்கள் எதிர்ப்பு
மழையில் அங்கன்வாடி மையத்தில் பெயின்ட் அடிக்க மக்கள் எதிர்ப்பு
மழையில் அங்கன்வாடி மையத்தில் பெயின்ட் அடிக்க மக்கள் எதிர்ப்பு
மழையில் அங்கன்வாடி மையத்தில் பெயின்ட் அடிக்க மக்கள் எதிர்ப்பு
ADDED : மார் 12, 2025 01:12 AM
ராமநாதபுரம்; ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம் கட்டடத்தில் கொட்டும் மழையில் பெயின்ட் அடித்ததைக் கண்டித்து அப்பணியை மக்கள் தடுத்து நிறுத்தினர்.
மண்டபம் ஊராட்சி ஒன்றியம் வாலாந்தரவை கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பராமரிப்பு பணி நடக்கிறது. நேற்று காலை முதல் மதியம் வரை மழை பெய்தது. அந்த நேரத்தில் அங்கன்வாடி கட்டடத்திற்கு பெயின்ட் அடிக்கும் பணி நடந்தது. இதனால் மக்கள் உடனடியாக பணியை தடுத்து நிறுத்தினர்.
வாலாந்தரவை முன்னாள் ஊராட்சி வார்டு உறுப்பினர் சுரேஷ் கூறுகையில், அங்கன்வாடி மையத்தின் கட்டட சுவற்றில் தண்ணீர் கசிந்து கொண்டிருக்கும் போது பெயின்ட் அடிக்கும் பணியை தடுத்துள்ளோம். தரமற்ற முறையில் பணி நடக்கிறது. அதிகாரிகள் ஆய்வு செய்து பணிகள் தரமாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.