/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மாணவர்களின் நலன் கருதி மீண்டும் பஸ் இயக்க பெற்றோர் கோரிக்கை மாணவர்களின் நலன் கருதி மீண்டும் பஸ் இயக்க பெற்றோர் கோரிக்கை
மாணவர்களின் நலன் கருதி மீண்டும் பஸ் இயக்க பெற்றோர் கோரிக்கை
மாணவர்களின் நலன் கருதி மீண்டும் பஸ் இயக்க பெற்றோர் கோரிக்கை
மாணவர்களின் நலன் கருதி மீண்டும் பஸ் இயக்க பெற்றோர் கோரிக்கை
ADDED : ஜூலை 13, 2024 04:36 AM
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக பள்ளி நேரத்தில் இயக்கப்பட்டு வந்த அரசு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.
முதுகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில் காக்கூர், ஏனாதி, கீழக்காஞ்சிரங்குளம், இளஞ்செம்பூர், சித்திரங்குடி, கீழச்சாக்குளம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
இங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்கள் நலன் கருதி முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்பட்டு வந்த அரசு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பெற்றோர் கூறியதாவது:
முதுகுளத்துார்--கமுதி சாலை 2 கி.மீ.,ல் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. முதுகுளத்துார் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். பஸ் ஸ்டாண்டிலிருந்து பள்ளிக்கு மாணவர்கள் நடந்து செல்லும் நிலை இருந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி நேரத்தில் மாணவர்களின் வசதிக்காக முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்டிலிருந்து காலை, மாலை நேரத்தில் அரசு பஸ் இயக்கப்பட்டது. தற்போது அந்த பஸ் வருவதில்லை. இதனால் மாணவர்கள் 2 கி.மீ., நடந்தே செல்கின்றனர்.
ரோட்டில் நடந்து செல்லும் போது அசம்பாவிதம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி மீண்டும் பள்ளி நேரத்தில் பஸ் ஸ்டாண்டில் இருந்து அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.