/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மீன் பிடி தடைக்காலம் முடிந்ததால் 1000 மீனவர் வெளிநாடு சென்றனர் மீன் பிடி தடைக்காலம் முடிந்ததால் 1000 மீனவர் வெளிநாடு சென்றனர்
மீன் பிடி தடைக்காலம் முடிந்ததால் 1000 மீனவர் வெளிநாடு சென்றனர்
மீன் பிடி தடைக்காலம் முடிந்ததால் 1000 மீனவர் வெளிநாடு சென்றனர்
மீன் பிடி தடைக்காலம் முடிந்ததால் 1000 மீனவர் வெளிநாடு சென்றனர்
ADDED : ஜூலை 13, 2024 04:36 AM
திருவாடானை, : வெளிநாடுகளில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததால் தொண்டி பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வெளி நாடுகளுக்கு சென்றனர்.
தொண்டி அருகே நம்புதாளை, முள்ளிமுனை, காரங்காடு, புதுப்பட்டினம் உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் பக்ரைன், துபாய், சவூதி போன்ற பல வெளிநாடுகளில் தங்கியிருந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
வழக்கம் போல் மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்படும் போது மீனவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டு தடைக்காலம் முடிந்தவுடன் மீண்டும் வெளி நாடுகளுக்கு செல்வது வழக்கம்.
அதே போல் கடந்த ஏப்ரலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தாயகம் திரும்பினர்.
இங்கு வந்த மீனவர்கள் மற்ற மீனவர்களுக்கு உதவியாக கடலுக்கு சென்று மீன் பிடிப்பார்கள்.
தற்போது மூன்று மாதம் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததால் மீண்டும் மீனவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றனர்.