/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ துாய்மை பணியாளர்கள் திறந்த ஊராட்சி அலுவலக கட்டடம் துாய்மை பணியாளர்கள் திறந்த ஊராட்சி அலுவலக கட்டடம்
துாய்மை பணியாளர்கள் திறந்த ஊராட்சி அலுவலக கட்டடம்
துாய்மை பணியாளர்கள் திறந்த ஊராட்சி அலுவலக கட்டடம்
துாய்மை பணியாளர்கள் திறந்த ஊராட்சி அலுவலக கட்டடம்
ADDED : ஜூன் 22, 2024 04:57 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே நல்லுகுறிச்சி ஊராட்சியில் புதிய ஊராட்சி அலுவலக கட்டடத்தை துாய்மைப் பணியாளர்கள் திறந்து வைத்தனர்.
நல்லுகுறிச்சி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ரூ.24.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ஊராட்சி அலுவலகம் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்புவிழா நடந்தது.
ஊராட்சி தலைவர் கோட்டைச்செல்வி தலைமை வகித்தார்.
துாய்மைப் பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் புதிய ஊராட்சி அலுவலக கட்டடத்தை துாய்மைப் பணியாளர்கள் கிராம மக்கள் முன்னிலையில் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினர்.
இதில் நல்லுகுறிச்சி, ஆம்பல்கூட்டம், காவல் கூட்டம், தாதனேந்தல் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் சுரேஷ் நன்றி கூறினார்.