ADDED : ஜூன் 22, 2024 04:58 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே இளஞ்செம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மேலச்சிறுபோது அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ முகாம் நடந்தது.
தலைமையாசிரியர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். டாக்டர் கார்த்திக் மாணவர்களுக்கு பரிசோதனை செய்தார். இதில் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை செய்து மாத்திரை, ஆலோசனை வழங்கினார். முகாமில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்றனர்.