/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தெளிப்பு நீர் பாசனத்தை சொட்டு நீராக மாற்ற சலுகை தெளிப்பு நீர் பாசனத்தை சொட்டு நீராக மாற்ற சலுகை
தெளிப்பு நீர் பாசனத்தை சொட்டு நீராக மாற்ற சலுகை
தெளிப்பு நீர் பாசனத்தை சொட்டு நீராக மாற்ற சலுகை
தெளிப்பு நீர் பாசனத்தை சொட்டு நீராக மாற்ற சலுகை
ADDED : ஜூன் 07, 2024 05:00 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மானியத்தில்தெளிப்பு நீர் பாசன முறையில் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் சொட்டுநீர் பாசனத்திற்கு மாற தோட்டக்கலைத் துறையில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் ஆறுமுகம் கூறியதாவது:
தற்சமயம் நீர்ப் பாசன கருவிகளை பிரதான் கிரிஸி சின்சாயி யோஜனா திட்டத்தில் அரசு மானியத்தில் தெளிப்பு நீர் பாசனமுறையை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு அரிய வாய்ப்பு வழங்கப்பட்டுஉள்ளது. தெளிப்பு நீர் பாசனக் கருவிகள் பெற்ற விவசாயிகள் சொட்டுநீர் பாசனமாக மூன்றாண்டுகளுக்குள் மாற்றவேண்டும்.
அப்போது தெளிப்பு நீர்பாசன மானியத்தை கழித்து மீதி வழங்கப்படும். விருப்பமுள்ள விவசாயிகள் மேலும் விபரங்களுக்கு தங்களது ஊர் அருகில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என்றார்.