ADDED : ஆக 07, 2024 07:37 AM

ராமநாதபுரம் -ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகர் மீது அணுகுண்டு வீசப்பட்ட தினம் ராமநாதபுரத்தில் கடைப்பிடிக் கப்பட்டது. மாணவர்கள் ஆல மரக்கன்று நட்டனர்.
இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் ஹிரோஷிமா நகரின் மீது அணுகுண்டு வீசப்பட்டது. இதில் 1 லட்சத்து 66 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். அதன் நினைவு தினம் ராமநாதபுரம் பசுமை மாணவர்கள் அமைப்பு சார்பில் கடைப்பிடிக்கப்பட்டது.
சேதுபதி குளத்தில் உள்ள பூங்காவில் நிகழ்ச்சி நடந்தது.
மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். சூழலியலாளர் ஆல்பர்ட்ராஜா, சிலம்பம் பயிற்சியாளர் மேத்யூ இம்மானுவேல், வில்வித்தை பயிற்சியாளர் பிரவீன் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் ஆல மரக்கன்று நட்டனர். ஏற்பாடுகளை பசுமை ஆர்வலர் சுபாஷ்சீனிவாசன் செய்திருந்தார்.