Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ விவசாயிகள் தவிப்பு ; வேளாண் அலுவலகத்தில் விதை நெல் தட்டுப்பாடு; நெற்களஞ்சியமான திருவாடானை தாலுகாவில் அவலம்

விவசாயிகள் தவிப்பு ; வேளாண் அலுவலகத்தில் விதை நெல் தட்டுப்பாடு; நெற்களஞ்சியமான திருவாடானை தாலுகாவில் அவலம்

விவசாயிகள் தவிப்பு ; வேளாண் அலுவலகத்தில் விதை நெல் தட்டுப்பாடு; நெற்களஞ்சியமான திருவாடானை தாலுகாவில் அவலம்

விவசாயிகள் தவிப்பு ; வேளாண் அலுவலகத்தில் விதை நெல் தட்டுப்பாடு; நெற்களஞ்சியமான திருவாடானை தாலுகாவில் அவலம்

திருவாடானை : ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமான திருவாடானை தாலுகாவில் வேளாண் அலுவலகத்தில் விதை நெல் கிடைக்காததால் விவசாயிகள் தவிக்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக திருவாடானை தாலுகா திகழ்கிறது. விவசாயமே பிரதான தொழிலாக உள்ள இத் தாலுகாவில் 26 ஆயிரம் எக்டேரில் சாகுபடி பணிகள் துவங்கியுள்ளது. விவசாயிகளை ஊக்கப்படுத்த அரசு பல்வேறு சலுகைகள் வழங்கி வருகிறது.

அதன்படி விவசாயிகளுக்கு தேவையான விதை, உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட இடு பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுவதால் விவசாயிகளுக்கு பெரும் உதவியாக உள்ளது. திருவாடானை தாலுகாவில் உயர் விளைச்சல் தரும் சன்ன ரகங்கள் டீலக்ஸ் பொன்னி, ஆர்.என்.ஆர்., என்.எல்.ஆர்., போன்ற நெல் விதைகளை விவசாயிகள் விதைப்பது வழக்கம்.

ஆனால் வேளாண் அலுவலகத்தில் போதுமான நெல் கையிருப்பு இல்லாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். விவசாயிகள் கூறியதாவது:

தமிழகத்தில் சாகுபடி பரப்பை அதிகரிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருப்பது பாராட்ட வேண்டியது தான். ஆனால் வழக்கமாக விதைக்கும் நிலங்களுக்கே போதுமான விதைகள் வேளாண் அலுவலகத்தில் கையிருப்பு இல்லாததது கவலையாக உள்ளது.

தற்போது திருவாடானை தாலுகாவில் நேரடி நெல் விதைப்பு பணிகள் துவங்கியுள்ளது. வேளாண் அலுவலகத்தில் விதை நெல் கிடைக்காததால் தனியாரிடம் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே விதைப்பிற்கு தேவையான விதை நெல் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

வேளாண் அலுவலர்கள் கூறுகையில், டீலக்ஸ் 2 டன், என்.எல்.ஆர்., 15 டன், ஆர்.என்.ஆர்., 8 டன் வந்தது. ஆண்டுதோறும் 80 முதல் 90 டன் வரை விதை நெல் விற்பனை ஆகும். இந்த ஆண்டு குறைவாக வந்ததால் விற்பனை ஆகிவிட்டது.

டீலக்ஸ், ஆர்.என்.ஆர்., ஆகிய விதை நெல்லை மட்டும் விவசாயிகள் விரும்பி வாங்குவார்கள். கூடுதலாக விதை நெல் கேட்டு அறிக்கை அனுப்பியுள்ளோம். வந்தவுடன் விவசாயிகளுக்கு சப்ளை செய்யப்படும் என்றனர்.

----





      Our Apps Available On




      Dinamalar

      Follow us