ADDED : ஜூன் 13, 2024 05:39 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே மேலக்கொடுமலுார் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி அலுவலகத்தை துாய்மை பணியாளர்கள் திறந்து வைத்தனர்.
மேலக்கொடுமலுார் ஊராட்சியில் ஊராட்சி அலுவலக கட்டடம் சேதமடைந்துள்ளதால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.23 லட்சத்தில் புதிய ஊராட்சி அலுவலகம் கட்டியுள்ளனர். நேற்று புதிய ஊராட்சி அலுவலகத்தை துாய்மை பணியாளர்கள் திறந்து வைத்தனர்.
ஊராட்சி தலைவர் சரவணன் கூறுகையில், ஊரை சுத்தம் செய்யும் துாய்மை பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களை ஊர்வலமாக அழைத்து வந்து மலர் துாவி மரியாதை செய்தோம் என்றார்.