/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வழிகாட்டி மதிப்பு சீரமைப்பு மக்கள் கருத்து தெரிவிக்கலாம் வழிகாட்டி மதிப்பு சீரமைப்பு மக்கள் கருத்து தெரிவிக்கலாம்
வழிகாட்டி மதிப்பு சீரமைப்பு மக்கள் கருத்து தெரிவிக்கலாம்
வழிகாட்டி மதிப்பு சீரமைப்பு மக்கள் கருத்து தெரிவிக்கலாம்
வழிகாட்டி மதிப்பு சீரமைப்பு மக்கள் கருத்து தெரிவிக்கலாம்
ADDED : ஜூன் 13, 2024 05:39 AM
ராமநாதபுரம்: மாவட்டத்தில் சந்தை வழிகாட்டி மதிப்பு சீரமைப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் ஆட்சேபணைகள் இருந்தால் மக்கள் கருத்து தெரிவிக்கலாம்.
தமிழகத்தில் சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பு சீரமைக்கபடுகிறது. இதன்படி இந்திய முத்திரை சட்டத்தின்படி மைய மதிப்பீட்டுக்குழு 2024 ஏப்., 26 ல் நிர்ணயம் செய்த நெறிமுறை கோட்பாட்டிற்கிணங்க ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்கு தாசில்தார், சார்பதிவாளர் அலுவலகங்கள் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது.
இதன் விவரங்கள் www.tnreginet.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மீது ஆட்சேபணைகள், கருத்துரைகள் இருப்பின் அதனை 15 நாட்களுக்குள் துணை மதிப்பீட்டு குழுவிடம், மதிப்பீட்டுதுணைக்குழு, கலெக்டர் அலுவலகம், ராமநாதபுரம், என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாக வழங்கலாம் என கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.