/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ எமனேஸ்வரம் அரசு பள்ளி அருகே வாறுகால் வசதியின்றி விபத்து அபாயம் கழிவுநீரால் சுகாதாரக்கேடு எமனேஸ்வரம் அரசு பள்ளி அருகே வாறுகால் வசதியின்றி விபத்து அபாயம் கழிவுநீரால் சுகாதாரக்கேடு
எமனேஸ்வரம் அரசு பள்ளி அருகே வாறுகால் வசதியின்றி விபத்து அபாயம் கழிவுநீரால் சுகாதாரக்கேடு
எமனேஸ்வரம் அரசு பள்ளி அருகே வாறுகால் வசதியின்றி விபத்து அபாயம் கழிவுநீரால் சுகாதாரக்கேடு
எமனேஸ்வரம் அரசு பள்ளி அருகே வாறுகால் வசதியின்றி விபத்து அபாயம் கழிவுநீரால் சுகாதாரக்கேடு
ADDED : ஜூன் 13, 2024 05:27 AM

பரமக்குடி: பரமக்குடி அருகே எமனேஸ்வரம் நயினார்கோவில் ரோட்டோரம் அரசு பள்ளி அருகே வாறுகால் கட்டப்படாமல் கழிவுநீர் தேங்கியுள்ளதால் தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளது.
பரமக்குடியில் இருந்து நயினார்கோவில் செல்வதற்கு எமனேஸ்வரம் பிரதான ரோடாக உள்ளது. இதன்படி எமனேஸ்வரம், இளையான்குடி விலக்கு ரோட்டில் தொடங்கி கடந்த ஆண்டுகளில் வலது ஓரங்களில் வாறுகால் கட்டப்பட்டது.
அவை இருந்த இடம் தெரியாமல் மணலால் மூடப்பட்டுள்ளது. எமனேஸ்வரம், ஜீவாநகர், கமலாநேரு நகர், மகாலட்சுமி காலனி என இரண்டு ஓரங்களிலும் வாறுகால் இன்றி கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.
இப்பகுதியில் நெசவாளர்கள் அதிக அளவில் குடியிருக்கின்றனர். இத்துடன் அரசு மேல்நிலைப்பள்ளி, ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நகராட்சி பள்ளிகள் உள்ளன. இதன் அருகே கழிவுநீர் வாறுகால் இன்றி ரோட்டோரங்களில் செல்கிறது. மாணவர்கள் சைக்கிள்களில் மற்றும் நடந்து செல்லும் போதும் தவறி விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
எனவே இப்பகுதிகளில் கழிவுநீர் தேங்காத வகையில் சுத்தம் செய்து வாறுகால்களை சீரமைக்க நகராட்சி, ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.