/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கீழக்கரை நகரில் டூவீலரில் வலம் வரும் சிறுவர்களால் ஆபத்து கீழக்கரை நகரில் டூவீலரில் வலம் வரும் சிறுவர்களால் ஆபத்து
கீழக்கரை நகரில் டூவீலரில் வலம் வரும் சிறுவர்களால் ஆபத்து
கீழக்கரை நகரில் டூவீலரில் வலம் வரும் சிறுவர்களால் ஆபத்து
கீழக்கரை நகரில் டூவீலரில் வலம் வரும் சிறுவர்களால் ஆபத்து
ADDED : ஜூன் 13, 2024 05:26 AM
கீழக்கரை: கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் டூவீலரில் அதிவேகமாகச் செல்வதால் விபத்து அபாயம் உள்ளது.
கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலை, கடற்கரை சாலை மற்றும் பிரதான சாலைகளில் குறுகிய சந்துக்கள் அதிகளவு உள்ளன. 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் தங்களது தந்தை மற்றும் சகோதரர்களின் டூவீலரில் ஊர்சுற்றுகின்றனர்.
போலீசார் இல்லாத நேரங்களில் சிறுவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் அதிவேகமாக செல்கின்றனர். சில இளைஞர்கள் பிறரின் கவனத்தை ஈர்க்க அதிக சத்தம் கொண்ட ஹாரன்களை ஒலிக்கச் செய்து செல்வதால் கவனச் சிதறல் ஏற்பட்டு சிறிய அளவில் விபத்து நடக்கிறது.
எனவே போலீசார் உரிய முறையில் நடவடிக்கை எடுத்து பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கும் போக்குவரத்து விதிமுறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.