/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஆதி பெரியாண்டவர் கோயிலில் மண்டலாபிஷேகம் ஆதி பெரியாண்டவர் கோயிலில் மண்டலாபிஷேகம்
ஆதி பெரியாண்டவர் கோயிலில் மண்டலாபிஷேகம்
ஆதி பெரியாண்டவர் கோயிலில் மண்டலாபிஷேகம்
ஆதி பெரியாண்டவர் கோயிலில் மண்டலாபிஷேகம்
ADDED : ஜூலை 19, 2024 11:52 PM

கீழக்கரை : கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சி தொண்டாலை மேலக்கரை ஆதி பெரியாண்டவர், அப்பாண்டவர் கோயிலில் ஜூன் 2ல் புதிதாக திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. 48 நாட்களுக்கு பிறகு நேற்று காலை 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடந்தது.
யாக வேள்வி குடங்களில் புனித நீர் பூஜிக்கப்பட்டு மூலவர்கள் செல்வகணபதி, பாலமுருகன், பெரியாண்டவர், அப்பாண்டவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் நடந்தது. மண்டல பூஜைகளை தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாக்கமிட்டி செயலாளர் ஆசிரியர் (ஓய்வு) எஸ்.ராமலிங்கம், தொண்டாலை மேலக்கரை மக்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.