/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சிறையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் சிறையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்
சிறையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்
சிறையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்
சிறையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 19, 2024 11:52 PM
ராமநாதபுரம் : மதுரை மத்திய சிறையில் காலியாக உள்ள நெசவு ஆசிரியர், கொதிகலன் உதவியாளர் மற்றும் பரமக்குடி மகளிர் கிளை சிறையில் துாய்மை பணியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நெசவு ஆசிரியர் பணிக்கு சான்றிதழ் தேர்ச்சி, கொதிகலன் உதவியாளர் பதவிக்கு உரிய சான்றிதழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். துாய்மை பணியாளர் பதவிக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் (மகளிர் மட்டும்) இன சுழற்சி முறை, இதர பதவிகளுக்கு பொதுப்போட்டி இனசுழற்சி முறை பின்பற்றப்படும்.
பணியிடங்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 18. அதிகபட்ச வயது 32. பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 2 ஆண்டு, தாழ்த்தப்பட்ட வகுப்பு, பழங்குடியினருக்கு வயது வரம்பு 5 ஆண்டு சலுகை உண்டு.
முன்னாள் ராணுவத்தினருக்கு வயது வரம்பு இல்லை. துாய்மை பணியாளர் பதவிக்கு தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். கல்வி, ஜாதி மற்றும் பிற தகுதிச் சான்றுகளின் நகல்களுடன் விண்ணப்பத்தை சிறை கண்காணிப்பாளர், மத்திய சிறைச்சாலை, மதுரை- 625 016க்கு ஆக.16க்குள் அனுப்ப வேண்டும்.