/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ இன்று லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை
இன்று லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை
இன்று லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை
இன்று லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை
ADDED : ஜூன் 04, 2024 05:55 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் லோக்சபா தொகுதிக்கு உட்பட 6 சட்டசபை தொகுதிகளில் உள்ள 1984 ஓட்டுச்சாவடிகளில் பதிவான ஓட்டுக்கள் 84 மேஜைகளில் எண்ணப்படுகிறது.
ராமநாதபுரம் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளில் 1984 ஓட்டுச்சாவடிகளில் 16,17,688 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த ஏப்.19ல் லோக்சபா தேர்தல் நடந்தது.
இதில், அறங்தாங்கி - 1,57,714, திருச்சுழி - 1,61,909, பரமக்குடி - 1,72,209, திருவாடானை - 1,95,547, ராமநாதபுரம்- 2,11,721, முதுகுளத்துார் 2,03,936 என 11,03,036 ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது.
ராமநாதபுரம் அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரி வளாகத்தில் உள்ள மையத்தில் இன்று காலை 8:00மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்க உள்ளது. முதலில் தபால் ஓட்டுக்கள் மட்டும் 8 மேஜைகள் எண்ணப்படுகிறது.
தொடர்ந்து சட்டசபை தொகுதிக்கு தலா 14 வீதம் 84 மேஜைகளில் ராமநாதபுரம், திருவாடானை தொகுதிகளில் 25 சுற்றுக்களாகவும், முதுகுளத்துார் 28 ம், பரமக்குடி (தனி) 22 ம், அறங்தாங்கி 21ம், திருச்சுழி 20 என 141 சுற்றுக்களாக ஓட்டுக்கள் எண்ணப்படுகிறது. ஓட்டுஎண்ணிக்கை நடைபெறும்இடத்தில் அலைபேசிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அனைத்து நடவடிக்கைகளும் வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது.
உரிய அடையாள அட்டை உடன் வரும் முகவர்கள், அலுவலர்களை மட்டும் போலீசார் சோதனைக்கு பிறகு கல்லுாரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் அதிகாரிகள் கூறினர்.