/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ களிமண்குண்டு காந்தாரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா களிமண்குண்டு காந்தாரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா
களிமண்குண்டு காந்தாரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா
களிமண்குண்டு காந்தாரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா
களிமண்குண்டு காந்தாரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா
ADDED : ஜூலை 13, 2024 05:09 AM

பெரியபட்டினம் : பெரியபட்டினம் அருகே களிமண்குண்டு கிராமத்தில் உள்ள காந்தாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது.
ஜூலை 10ல் அனுக்ஞை, விநாயகர், கணபதி ஹோமத்துடன் முதல் காலை யாகசாலை பூஜை துவங்கியது. நான்காம் கால யாகசாலை பூஜைக்கு பிறகு நாடி சந்தனம், யாத்ரா தானம் உள்ளிட்டவைகள் நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு மேல் கடம் புறப்பாடு நடந்தது.
கருடன் வட்டமிட்டவுடன் காலை 10:10 மணிக்கு கற்பக விநாயகர், காந்தாரி அம்மன், தணிகை வேலன், இருளப்பசாமி, ஈஸ்வரி அம்மன், கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோபுர விமான கலசத்தில் பட்டாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்திலேயே அதிக உயரம் கொண்ட 32 அடி உயரமுள்ள பிரம்மாண்ட சுப்பிரமணியர் சுவாமி சிலைக்கு கும்ப நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. புனித நீர் பக்தர்களின் மீது தெளிக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டன. ஏற்பாடுகளை களிமண்குண்டு கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.