/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சமச்சீர் உரமிடல் குறித்த விவசாயிகள் பயிற்சி முகாம் சமச்சீர் உரமிடல் குறித்த விவசாயிகள் பயிற்சி முகாம்
சமச்சீர் உரமிடல் குறித்த விவசாயிகள் பயிற்சி முகாம்
சமச்சீர் உரமிடல் குறித்த விவசாயிகள் பயிற்சி முகாம்
சமச்சீர் உரமிடல் குறித்த விவசாயிகள் பயிற்சி முகாம்
ADDED : ஜூலை 13, 2024 05:07 AM

நயினார்கோவில் : பரமக்குடி அருகே நயினார்கோவிலில் சமச்சீர் உரமிடல் மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மூலம் ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைப்பது தொடர்பான விவசாயிகள் பயிற்சி முகாம் நடந்தது.
நயினார்கோவில் வட்டார வேளாண் துறை சார்பில் அ.காச்சான் கிராமத்தில் நடந்த பயிற்சி முகாமில் மாவட்ட வேளாண் துணை இயக்குனர் (மாநிலத் திட்டம்) அமர்லால் தலைமை வகித்தார்.
விவசாயிகள் மண் பரிசோதனை செய்து மண் வள அட்டை பரிந்துரைப்படி உரமிடவேண்டும். பசுந்தாள் உரப் பயிர்கள் சாகுபடி செய்து மடக்கி உழுதால் மண் வளம் மேம்படும் என்றார்.
வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் கண்ணையன், வேளாண் உதவி இயக்குனர் (தர கட்டுப்பாடு) நாகராஜன், நயினார்கோவில் உதவி இயக்குனர் பானுபிரகாஷ், மண் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் கீர்த்தனா, துணை அலுவலர் அண்ணாதுரை, உதவி வேளாண் அலுவலர் லாவண்யா பயிற்சி அளித்தனர்.
தொழில்நுட்ப உதவி அலுவலர்கள் இளையராஜா, ஜெயப்பிரியா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.