ADDED : மார் 13, 2025 04:51 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் திடல் தெரு பத்திரகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
நேற்று காலை கோபூஜை, லட்சுமி பூஜை, சப்த கன்னிபூஜை, இரண்டாம்கால யாக பூஜை, பூர்ணாஹூதி, கலச புறப்படுக்கு பிறகு கும்ப நீர் ஊற்றப்பட்டது.
பத்திரகாளி அம்மனுக்குபால், மஞ்சள், சந்தனம், திரவிய பொடி உட்பட பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சத்திரிய நாடார் உறவின் முறையினர் செய்தனர்.