/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமநாதபுரம் விநாயகர், அம்மன் கோயில்களில் கும்பாபிேஷகம் ராமநாதபுரம் விநாயகர், அம்மன் கோயில்களில் கும்பாபிேஷகம்
ராமநாதபுரம் விநாயகர், அம்மன் கோயில்களில் கும்பாபிேஷகம்
ராமநாதபுரம் விநாயகர், அம்மன் கோயில்களில் கும்பாபிேஷகம்
ராமநாதபுரம் விநாயகர், அம்மன் கோயில்களில் கும்பாபிேஷகம்
ADDED : ஜூன் 10, 2024 05:52 AM

ராமநாதபுரம், : ராமநாதபுரம் வடக்கு தெரு செல்வ விநாயகர் கோயிலில்கும்பாபிேஷகம் நடந்தது.விழா ஜூன் 7 ல் கணபதி ேஹாமத்துடன் துவங்கி, மூன்றுகாலயாகபூஜைகள் நடந்தது.
நேற்று காலையில் கும்பகலசங்கள் புறப்படாகி காலை 10:00மணிக்கு கோபுரகலசத்தில் புனிதநீர் ஊற்றினர். மூலவர் செல்வ விநாயகருக்கு அபிஷேகம் செய்து அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அன்னதானம்வழங்கப்பட்டது. மாலையில் விநாயகர் வலம் வந்தார்.
ராமநாதபுரம் முகவை ஊருணி மேல்கரையில் அமைந்துள்ள ராஜகாளியம்மன் கோயில் யாகபூஜைகளுடன் அம்மன்,பரிவார தெய்வங்களான வராஹி அம்மன், கருப்பண்ணசுவாமி ஆகியோருக்கு அபிேஷகங்கள் செய்து, அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.
அன்னதானம் வழங்கினர். மாலையில் அம்மன் ஊர்வலம்நடந்தது.ராமநாதபுரம் தெற்குத்தெருவில் அமைந்துள்ள களஞ்சியத்து காளியம்மன், கோல்கட்டா காளியம்மன்கோயிலில் விநாயகர் பூஜை,யாகசாலை பூஜைகளுடன் காலை 8:00மணிக்கு கும்பாபிேஷகம் நடந்தது.
காளியம்மன், சிவன், விநாயகர், முருகன்,நாகம்மாள், சமயபுரம் மாரியம்மன் ஆகிய பரிவார தெய்வங்களுக்கு அபிேஷகம் செய்து அலங்காரத்தில்பூஜைகள் நடந்தது. அன்னதானம் வழங்கினர். ஏராளமானபக்தர்கள் பங்கேற்றனர்.
சாயல்குடி: சாயல்குடி அருகே தெற்கு இலந்தைகுளம் கிராமத்தில் உள்ள சக்தி மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
காலை 8:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைக்கு பிறகு கோயில் கோபுர விமான கலசத்தில் சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். மூலவர் சக்தி மாரியம்மனுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கடலாடி: கடலாடி ஷத்திரிய நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன், மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
நேற்று காலை 8:00 மணிக்கு கோபுர விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் செய்தனர்.
மூலவர்கள் பத்திரகாளியம்மன், மாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் விளக்கு பூஜை நடந்தது. உற்ஸவ மூர்த்திகள் கடலாடி நகரில் முக்கிய வீதிகளில் சப்பரத்தில் நகர்வலம் வந்தனர்.