/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கமுதி ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் கமுதி ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம்
கமுதி ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம்
கமுதி ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம்
கமுதி ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம்
ADDED : ஜூலை 10, 2024 04:39 AM
கமுதி : கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சில் கூட்டம் ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் சித்ராதேவி, பி.டி.ஓ.,க்கள் கோட்டைராஜ், சந்திரமோகன் முன்னிலை வகித்தனர். மேலாளர் ராமச்சந்திரன் வரவேற்றார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டது.
கிராமங்களில் ரோடு, குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
அன்பரசு: பேரையூர் கவுன்சிலுக்கு உட்பட்ட கிராமங்களில் ஆர்.ஓ., பிளான்ட் அமைக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேர்ந்தக்கோட்டையில் அமைக்கப்பட்ட ரோடு சேதமடைந்துள்ளது. கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.டி.ஓ.,கோட்டைராஜ்: பேரையூர் அருகே சாமிபட்டி, பீட்டர்புரம், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீரை ஆய்வு செய்து ஆர்.ஓ., பிளான்ட் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சேர்ந்தக்கோட்டை கிராமத்தில் சேதமடைந்த ரோடு குறித்து பொறியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.
ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வி: கமுதி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் மக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, ரோடு வசதி உள்ளிட்ட பணிகளை அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் நிறைவேற்ற ஒன்றிய பொறியாளர்கள், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதில் பொறியாளர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மேலும் கவுன்சிலர் கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.