/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஆப்பனுார் அங்கன்வாடி மையத்தில் பட்டமளிப்பு ஆப்பனுார் அங்கன்வாடி மையத்தில் பட்டமளிப்பு
ஆப்பனுார் அங்கன்வாடி மையத்தில் பட்டமளிப்பு
ஆப்பனுார் அங்கன்வாடி மையத்தில் பட்டமளிப்பு
ஆப்பனுார் அங்கன்வாடி மையத்தில் பட்டமளிப்பு
ADDED : ஜூன் 07, 2024 05:02 AM

கடலாடி: -கடலாடி அருகே ஆப்பனுார் அங்கன்வாடி மையத்தில் முன்பருவ கல்வி முடித்த குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் முன் பருவக் கல்வி முடித்த குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.
அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழாவும், குருவாடி அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள்சேர்க்கை விழாவும் நடந்தது. கடலாடி வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சசிகலா தலைமை வகித்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர் வெள்ளை பாண்டியன் வரவேற்றார்.
சிற்றுண்டி, சத்து மாவு, மாதந்தோறும் எடை, உயரம் கண்காணிப்பு, கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்களுக்கு அளிக்கப்படும் விழிப்புணர்வு, மத்திய அரசின் போஷன் அபியான் திட்டம் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. ஏராளமான பெற்றோர், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.