Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சாயல்குடியில் பஸ் டிப்போவிற்கு ஒதுக்கிய இடத்தில் சீமை கருவேல மரங்கள் அகற்றம்

சாயல்குடியில் பஸ் டிப்போவிற்கு ஒதுக்கிய இடத்தில் சீமை கருவேல மரங்கள் அகற்றம்

சாயல்குடியில் பஸ் டிப்போவிற்கு ஒதுக்கிய இடத்தில் சீமை கருவேல மரங்கள் அகற்றம்

சாயல்குடியில் பஸ் டிப்போவிற்கு ஒதுக்கிய இடத்தில் சீமை கருவேல மரங்கள் அகற்றம்

ADDED : ஜூன் 07, 2024 05:04 AM


Google News
Latest Tamil News
சாயல்குடி: சாயல்குடியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே 2.5 ஏக்கரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நிலம் கையகப்படுத்தப்பட்டு சுற்றிலும் வேலி அடைக்கப்பட்டு இருந்தது. கடந்த 2021 மாதத்தில் அவ்விடத்தில் சாயல்குடி போக்குவரத்து பணிமனை அமைப்பதற்கான இடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம், காரைக்குடி மண்டலம் சார்பில் இவ்விடம் போக்குவரத்து பணிமனைக்கான இடம் என விளம்பரப் பலகை வைக்கப்பட்ட நிலையில் உள்ளது.கடந்த மூன்றாண்டுகளாக எவ்வித பராமரிப்பும் இன்றி அவ்விடத்தில் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்தது.

மறைவான இடத்தை பயன்படுத்தி அப்பகுதியில்உள்ளோர் பன்றிகளை வளர்த்து வருவதாலும் அப்பகுதி முழுவதும் சுகாதாரக் கேடாக இருந்தது. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அருகே அதிகளவு பன்றிகள் வளர்க்கும் இடமாக இருந்ததால் இத்திட்டத்தின் நோக்கம் கேள்விக்குறியாக மாறியது.

சாயல்குடியை மையப்படுத்தி போக்குவரத்து பணிமனை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து தினமலர் நாளிதழில் மே 17ல் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சாயல்குடி பஸ் டிப்போவிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆக்கிரமித்து வளர்ந்திருந்த சீமைக் கருவேல மரங்களை முற்றிலுமாக அழிக்கும் பணி நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us