/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமேஸ்வரத்தில் மீன்கள் விலை உயர்வு ராமேஸ்வரத்தில் மீன்கள் விலை உயர்வு
ராமேஸ்வரத்தில் மீன்கள் விலை உயர்வு
ராமேஸ்வரத்தில் மீன்கள் விலை உயர்வு
ராமேஸ்வரத்தில் மீன்கள் விலை உயர்வு
ADDED : ஜூலை 23, 2024 07:25 AM

ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் பாரம்பரிய வலையில் சிக்கும் மீன்கள் விலையும் உயர்ந்துள்ளது.
இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் ஜூலை 8 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் தென் மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்து சூறாவளிக் காற்று வீசி ராட்சத அலை எழும் என வானிலை மையம் எச்சரித்ததால் ஜூலை 16 முதல் கடலுக்குள் செல்ல மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதனால் தொடர்ந்து 15 நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் ராமேஸ்வரத்தில் மீன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
இந்நிலையில் பாரம்பரிய மீன்பிடி முறையான கரை வலை, நண்டு வலையில் சிக்கும் மீன்களுக்கும் கிராக்கி ஏற்பட்டது.
இதனால் நேற்று ராமேஸ்வரம் நகராட்சி மீன் மார்க்கெட்டில் ஒரு கிலோ நகரை, வெளமீன் ரூ.400 (பழைய விலை ரூ.300), மாஊலா மீன் ரூ. 600 (பழைய விலை ரூ.500), கணவாய் ரூ.250 (பழைய விலை ரூ.200), சீலா ரூ.800 (பழைய விலை ரூ.600) என விற்றதால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் காற்றின் வேகம் தணிந்ததால் 15 நாட்களுக்குப் பிறகு நேற்று ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.