/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ செம்மறி ஆடுகள் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் விவசாயிகள் செம்மறி ஆடுகள் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்
செம்மறி ஆடுகள் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்
செம்மறி ஆடுகள் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்
செம்மறி ஆடுகள் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்
ADDED : ஜூலை 22, 2024 04:44 AM

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் நெல்சாகுபடி பணிகள் முடிந்துள்ளதால், தற்போது அதிக லாபம் தரும் செம்மறி ஆடுகள் வளர்ப்பில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகளுக்கு அதிக லாபம் தரும் தொழில்களில் செம்மறி ஆடு வளர்ப்பு ஒன்று.
தற்போது விவசாய பணிகள் முடிந்து மேய்ச்சல் நிலங்களாக வயல்கள் இருப்பதால் செம்மறி ஆடுகள் தீவனத்திற்கு பயன்படுகிறது.
அறுவடை பணிகள் முடிந்து விட்டதால் வயல்களில் ஆட்டுக்கிடை அமைக்கப்படுகிறது.
இதற்கு ஆடு வளர்ப்பவர்கள் விவசாயிகளிடமிருந்து குறிப்பிட்ட தொகையை பெறுகின்றனர். செம்மறி ஆட்டு கழிவுகள் வயல்களுக்கு உரமாக பயன்படுகிறது.
அடுத்த ஆண்டில் நெல் சாகுபடி செய்யும் போது பயிர்களின் வளர்ச்சிக்கு இந்த வகை இயற்கை உரங்கள் பயனுள்ளதாக உள்ளது.
விவசாயிகள் கூறுகையில், வயல் வெளி பட்டிகளில் கிடை அமைத்து வைக்கபடுகின்றன. இதன் மூலம் செம்மறி ஆடுகளின் சாணம், சிறுநீர் ஆகியன நெல் வயலுக்கு அடி உரமாக சேருகிறது.
தற்போது குறைவான செம்மறி ஆடுகளே இருப்பதால் கிராக்கி ஏற்பட்டுள்ளது என்றனர்.