/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடி மருத்துவமனைகளில் போலி நர்சுகள் பரமக்குடி மருத்துவமனைகளில் போலி நர்சுகள்
பரமக்குடி மருத்துவமனைகளில் போலி நர்சுகள்
பரமக்குடி மருத்துவமனைகளில் போலி நர்சுகள்
பரமக்குடி மருத்துவமனைகளில் போலி நர்சுகள்
ADDED : ஜூலை 11, 2024 04:52 AM
பரமக்குடி: -பரமக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் நர்சிங் கல்லுாரியில் படித்து முடித்த மாணவிகளை பணியில் அமர்த்தாமல் போலி நர்சுகளை பணியில் ஈடுபடுத்துகின்றனர். மாவட்ட நிர்வாகம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆங்காங்கே பள்ளி படிப்பு அல்லது கல்லுாரி கல்வி முடித்த போலி டாக்டர்கள் அவ்வப்போது களை எடுக்கப்பட்டனர்.
இதே போல் பாரம்பரிய வைத்தியம் மேற்கொள்வோர் ஆங்கில மருந்து, ஊசிகளை பயன்படுத்தியதன் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள பல நுாறு மருத்துவமனைகளில் கல்லுாரிகளில் முறையாக பயின்ற நற்சுகளை பணியில் அமர்த்தி உள்ளனர். இதே போல் மருத்துவ உபகரணங்களை பராமரிப்பது துவங்கி, அலுவலகப் பணிகளிலும் ஏராளமானோர் இருக்கின்றனர்.
இவர்களில் பெரும்பாலான மருத்துவமனைகளில் நர்சிங் படிப்புகளை முறையாக பயிலாத போலி நர்சுகளை வைத்து நோயாளிகளுக்கு கட்டு போடுவது, ஊசி செலுத்துவது போன்ற பணிகளில் ஈடுபடுத்துகின்றனர்.
இதனால் நோயாளிகள் சில இடங்களில் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
ஆகவே ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மற்றும் பரமக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் போலி நர்சுகளை களை எடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணை இயக்குனர் டாக்டர் பிரகநாதன் கூறியதாவது:
பொதுவாக தனியார் மருத்துவமனைகளை பொருத்தவரை அந்த மருத்துவமனையின் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் டெக்னீசியன்கள் உள்ளிட்டோரின் விவரங்களை பெற்றுக்கொண்டு லைசென்ஸ் வழங்கப்படும். தொடர்ந்து அங்கு துப்புரவு பணியாளர்கள் மற்றும் அலுவலகப் பணிக்கு என பலரும் நியமிக்கப்படுகின்றனர்.
அவர்களுக்கு உரிய பணிகளை அவரவரே செய்ய வேண்டும். அலுவலகம் சார்ந்த பணிகளில் உள்ளவர்கள் செவிலியர் செய்யும் பணியை செய்ய முடியாது.
இது போல் ஏதேனும் மருத்துவமனைகள் செயல்பட்டால் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.