/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம் பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்
பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்
பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்
பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்
ADDED : ஜூலை 16, 2024 05:46 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
ராமநாதபுரம் வண்டிக்காரத் தெரு அறிஞர் அண்ணாதுரை நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு தலைமை யாசிரியர் ஜெயந்தி தலைமை வகித்தார். காமராஜர் உருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.
பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் குணசேகரன், மாதவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் அருகே காரிகூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் விழாவிற்கு தலைமையாசிரியர் பொன்னுச்சாமி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் ராமநாதன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவி ஜனுல் முன்னிலை வகித்தனர்.
காமராஜர் படத்திற்கு மாலை அணவித்து மரியாதை செலுத்தினர். போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி மேலாண்மைக் குழு துணைத்தலைவர் ஜாஸ்மின் ரோஜா, உறுப்பினர்கள் பரமேஸ்வரி, பிரியா, உதவி ஆசிரியர் கவிதா உட்பட மாணவர்கள் பங்கேற்றனர்.
*ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ராஜு தலைமையில் விழா நடந்தது. மாணவர்களுக்கு காமராஜர் குறித்த பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருத்தேர்வளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் இருதயசாமி தலைமையில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது. உதவி ஆசிரியர் ஜெரால்டு காமராஜரின் வாழ்க்கை வரலாறு குறித்தும், கல்விக்கு அவர் ஆற்றிய தொண்டுகள் குறித்தும் மாணவர்களிடம் விளக்கினார். கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தனுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் லுாயிஸ் ராஜமாணிக்கம் தலைமையிலும், ஆயங்குடி ஜோதி நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் தேன்மொழி தலைமையிலும் விழா கொண்டாடப்பட்டது. போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிக்கப்பட்டது.
திருப்பாலைக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த விழாவிற்கு ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் தலைவர் ராதிகா தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ராஜூ முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, பாட்டுப் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.
மாணவர்கள் காமராஜர் உருவம் முகமூடி அணிந்து விழாவை கொண்டாடினர். விழாவில், ஆசிரியர்கள் ப்ரீட்டா, லதா, அன்பில் அமலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கொக்கூரணி ஆர்.சி., தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜெயராணி, வாகைக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் குமரேசன் தலைமையிலும் விழா கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
* பரமக்குடி அருகே சோமநாதபுரம் சவுராஷ்டிரா தேசிய நடுநிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா, காலை உணவு திட்டம் துவக்க விழா நடந்தது. பள்ளி தலைவர் ராமையன் தலைமை வகித்தார். தாளாளர் குப்புசாமி வரவேற்றார். பரமக்குடி வட்டார கல்வி அலுவலர் சுதாமதி திட்டத்தை துவக்கி வைத்து தேசிய கொடியை ஏற்றினார். தலைமை ஆசிரியை ஸ்ரீதேவி வரவேற்றார்.
*பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சேர்மன் சவுந்தர நாகேஸ்வரன் தலைமை வகித்தார். தாளாளர் சுப்பிரமணியன், பொருளாளர் தினகரன், லயன்ஸ் மாவட்ட கவர்னர் ஜெகநாதன் முன்னிலை வகித்தனர். முதல்வர் சோபனா தேவி வரவேற்றார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியர் முரளீஸ்வரன் பேசினார்.
* பரமக்குடி அருகே லட்சுமணன் குடியிருப்பு கிராமத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகங்கள், பேனா வழங்கப்பட்டது.
மாவட்ட தலைவர் மலர்விழி தலைமை வகித்தார். நகர் தலைவர் அர்ஜுன் பாண்டியா, ஒன்றிய தலைவர் கார்த்திக், வக்கீல் அணி தலைவர் துரை மருது முன்னிலை வகித்தனர். பரமக்குடி நகர் தலைவர் தமிழ் பாலா, மாவட்ட மாணவர் அணி தலைவர் தமீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
*திருப்புல்லாணி அருகே மேதலோடை நாடார் மகாஜன சங்கம் உயர்நிலைப் பள்ளியில் விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் முனியசாமி தலைமை வகித்தார்.
பள்ளிச் செயலாளர் ஐசக் முத்துராஜ் முன்னிலை வகித்தார்.
ஊராட்சி தலைவர் மெனையத்தாள், தினகராஜ், பள்ளி கமிட்டி தலைவர் ஆர்.தினகராஜ், கிராம முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியர் மணிவாசகம் நன்றி கூறினார்.
உத்தரகோசமங்கை அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ராணி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளராக தமிழாசிரியர் சத்தியேந்திரன், முத்தரசு பேசினர். ஆசிரியர்கள் நிவேதிதா, ஜான் ஆல்பர்ட், ஜாபர்ஷா, முத்துடையார், மதியழகன், சங்கர், ரவிச்சந்திரன், ஓவிய ஆசிரியர் பத்மாவதி, உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.