/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ செட்டி அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா செட்டி அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா
செட்டி அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா
செட்டி அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா
செட்டி அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா
ADDED : ஜூலை 16, 2024 05:47 AM

பரமக்குடி, : பரமக்குடி அருகே அரியனேந்தல் செட்டி அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா நடந்தது.
கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கிய நிலையில் தினமும் அய்யனாருக்கு அபிஷேகம், அலங்காரங்கள் மற்றும் தீபாராதனை நடந்தது. மேலும் விவசாயிகள் குதிரை எடுப்பு விழாவை கோலாகலமாக கொண்டாடினர்.
அப்போது விநாயகர் கோயிலில் இருந்து குதிரை, காளை மாடு உள்ளிட்ட சிலைகளை ஆண்கள் தலையில் சுமந்து சென்றனர்.
தொடர்ந்து பெண்கள் முளைப்பாரி சுமந்து சென்று அய்யனார் கோயிலில் வைத்து வழிபட்டனர்.
இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர்.