/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஆட்டோ ஸ்டாண்ட் இடத்தை மீண்டும் வழங்க டிரைவர்கள் வலியுறுத்தல் ஆட்டோ ஸ்டாண்ட் இடத்தை மீண்டும் வழங்க டிரைவர்கள் வலியுறுத்தல்
ஆட்டோ ஸ்டாண்ட் இடத்தை மீண்டும் வழங்க டிரைவர்கள் வலியுறுத்தல்
ஆட்டோ ஸ்டாண்ட் இடத்தை மீண்டும் வழங்க டிரைவர்கள் வலியுறுத்தல்
ஆட்டோ ஸ்டாண்ட் இடத்தை மீண்டும் வழங்க டிரைவர்கள் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 06, 2024 05:48 AM

ஏர்வாடி : ஏர்வாடியில் ஆட்டோ ஸ்டாண்டை வருவாய்த்துறை அதிகாரிகள் வேலியிட்டு அடைத்துள்ளனர். மீண்டும் அவ்விடத்தில் ஆட்டோ நிறுத்த அனுமதிக்க வேண்டும் என டிரைவர்கள் வலியுறுத்தினர்.
ஏர்வாடி ஆட்டோ சங்க நிர்வாகிகள் மைதீன் பாதுஷா, சண்முகவேல் மற்றும் சி.ஐ.டி.யு., மாவட்டச் செயலாளர் சிவாஜி, ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் துணைத்தாசில்தார் பரமசிவத்திடம் மனு அளித்துள்ளனர்.
இதில் ஏர்வாடி தர்ஹா எதிரில் உள்ள இடத்தில் ஆட்டோ ஸ்டாண்ட் அமைத்து 15 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது வருவாய்த்துறை அதிகாரிகள் ஸ்டாண்ட் இடத்தை வேலியிட்டு அடைத்து விட்டனர். ஆட்டோவை ரோட்டில் நிறுத்தினால் போலீசார் எச்சரிக்கை செய்கின்றனர்.
எனவே மீண்டும் அதே இடத்தில் ஆட்டோக்களை நிறுத்தி தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.