/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை: ஆடி வெள்ளியில் நேர்த்திக்கடன் நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை: ஆடி வெள்ளியில் நேர்த்திக்கடன்
நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை: ஆடி வெள்ளியில் நேர்த்திக்கடன்
நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை: ஆடி வெள்ளியில் நேர்த்திக்கடன்
நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை: ஆடி வெள்ளியில் நேர்த்திக்கடன்
ADDED : ஜூலை 19, 2024 11:59 PM

பரமக்குடி : பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலுக்கு ஆடி வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் பாத யாத்திரை சென்று வழிபட்டனர்.
பரமக்குடியில் இருந்து 12 கி.மீ.,ல் நயினார்கோவில் சவுந்தர்ய நாயகி அம்மன் சமேத நாகநாத சுவாமி கோயில் உள்ளது. இங்கு உள்ள புற்றடி சன்னதியில் பக்தர்கள் தரிசனம் செய்து வேண்டுதலை நிறைவேற்றுவது வழக்கம்.
ஆண்டு முழுவதும் பக்தர்கள் இக்கோயிலுக்கு சென்று தரிசிக்கின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் அனைத்து ஆடி மாத வெள்ளிக்கிழமைகளிலும் பக்தர்கள் பாதயாத்திரை சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இதன்படி திருமண தடை, குழந்தை பேறு வேண்டியும் மற்றும் அனைத்து வகை தோஷங்கள் நீங்க வேண்டுதல் உள்ளவர்கள் பாதயாத்திரையாக சென்று தரிசித்து வருகின்றனர். இதன்படி நேற்று அதிகாலை 5:00 மணி முதல் பக்தர்கள் நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கோயிலில் உள்ள வாசுகி தீர்த்த குளம் மாசடைந்து உள்ளதுடன், அருகில் உள்ள பகுதிகளில் தண்ணீர் வசதி இல்லாததால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.