/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தனுஷ்கோடி சாலையில் மணல் குவியலால் விபத்து அபாயம் தனுஷ்கோடி சாலையில் மணல் குவியலால் விபத்து அபாயம்
தனுஷ்கோடி சாலையில் மணல் குவியலால் விபத்து அபாயம்
தனுஷ்கோடி சாலையில் மணல் குவியலால் விபத்து அபாயம்
தனுஷ்கோடி சாலையில் மணல் குவியலால் விபத்து அபாயம்
ADDED : ஜூலை 05, 2024 04:36 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் மணல் குவியலால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான வாகனங்களில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
இதனால் ராமேஸ்வரம், தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
ராமேஸ்வரத்தில் சீதா தீர்த்தம் பஸ்ஸ்டாப்பில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் 100 மீ.,க்கு மணல் குவிந்து பரவி கிடக்கிறது. இச்சாலை வழியாக செல்லும் டூவீலர், ஆட்டோக்கள் மணல் குவியலில் சிக்குவதால் அடிக்கடி பலர் காயம் அடைகின்றனர்.
இந்த மணல் குவியலை அகற்றக்கோரி சமூக ஆர்வலர்கள் பலமுறை வலியுறுத்தியும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதனால் விபத்து ஏற்பட்டு மக்களுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது.