Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ புலியூரில் கால்நடை மருந்தக கட்டடம் சேதம்

புலியூரில் கால்நடை மருந்தக கட்டடம் சேதம்

புலியூரில் கால்நடை மருந்தக கட்டடம் சேதம்

புலியூரில் கால்நடை மருந்தக கட்டடம் சேதம்

ADDED : ஜூலை 18, 2024 10:36 PM


Google News
திருவாடானை : திருவாடானை அருகே புலியூர் கால்நடை மருத்துவமனை கட்டடம் சேதமடைந்துள்ளதால் கால்நடைகளை சிகிச்சைக்கு அழைத்து வருவோர் அச்சமடைகின்றனர்.

புலியூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் கால்நடை வளர்ப்பு, விவசாயத்தை பிராதான தொழிலாக செய்து வருகின்றனர்.

இப்பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. 2015ல் இங்கு அரசு கால்நடை மருந்தகம் அமைக்கபட்டது.

இதன் மூலம் உப்புக்கோட்டை, சிறுகம்பையூர், நோக்கன்வயல், கட்டிவயல், காடுவட்டி, புல்லுார், மருதவயல் உட்பட 36 கிராம கால்நடை வளர்ப்போர் பயனடைகின்றனர். இந்நிலையில் மருத்துவமனை கட்டடம் சேதம் அடைந்துள்ளது. சிமென்ட் பூச்சு உதிர்ந்தும், சுவரில் விரிசல் ஏற்பட்டும், தரைகள் சேதமடைந்தும் உள்ளது. இதனால் கால்நடை சிகிச்சைக்கு வருவோர் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் சேதமடைந்துள்ள கால்நடை மருத்துவமனை கட்டடத்தை சீரமைக்க கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கால்நடை வளர்ப்போர் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us