Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ரசாயன உரங்கள் குறைப்பு விவசாயிகள் பயிற்சி முகாம்

ரசாயன உரங்கள் குறைப்பு விவசாயிகள் பயிற்சி முகாம்

ரசாயன உரங்கள் குறைப்பு விவசாயிகள் பயிற்சி முகாம்

ரசாயன உரங்கள் குறைப்பு விவசாயிகள் பயிற்சி முகாம்

ADDED : ஜூலை 10, 2024 04:58 AM


Google News
ஆர்.எஸ்.மங்கலம், ; ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா கள்ளிக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட அழியாதான் மொழி கிராமத்தில் சமச்சீர் உர நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மூலம் ரசாயன பயன்பாட்டை குறைத்தல் தொடர்பாக விவசாயிகள் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கண்ணையா தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் புஷ்பம் முன்னிலை வகித்தார். பயிற்சியில் விவசாயிகள் பயிரிடும் பயிர்களுக்கு ஏற்ற சமச்சீர் உர மேலாண்மை மூலம் ரசாயன உரம் பயன்பாட்டை குறைத்து மண்வளத்தை பாதுகாக்க வேண்டும்.

நெல் பயிரிடும் விவசாயிகள் பசுந்தாள் உர பயிர்களான சனப்பு, தக்கை பூண்டு, கொழுந்து போன்றவற்றை பயிரிட்டும் பூக்கும் தருவாயில் மடக்கி உழுவதன் மூலம் மண்ணின் வளம் பாதுகாக்கப்படுகிறது என வேளாண்மை இணை இயக்குனர் விவசாயிகளிடம் தெரிவித்தார்.

தொடர்ந்து விவசாயிகளுக்கு பசுந்தாள் உரப்பயிர் விதைகள் 50 சதவீதம் மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டது. மேலும் ஏக்கருக்கு வேப்பிலை, நொச்சி, ஆவாரை, புங்கன் போன்ற பசுந்தழைகளை மண்ணில் இட்டு உழுவதன் மூலம் மண்ணில் கரிமசத்து அதிகரிக்கிறது.

இயற்கை உரங்களான மக்கிய தொழு உரம், உயிர் உரங்கள் நுண்ணுாட்ட உரங்கள் போன்றவற்றை பயன்படுத்தி பயனடைமாறு வேளாண்மை துணை இயக்குனர் பாஸ்கர மணியன் வலியுறுத்தினார்.

ஆர்.எஸ். மங்கலம் வேளாண்மை உதவி இயக்குனர் ராஜலட்சுமி அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் எடுத்துரைத்தார். வேளாண் அலுவலர் சுப்ரியா, உதவி வேளாண் அலுவலர் தீபா, உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் முருகானந்தம், ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us