/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பள்ளி திறக்கப்படும் நாளில் மாணவர் கையில் புத்தகம் பள்ளி திறக்கப்படும் நாளில் மாணவர் கையில் புத்தகம்
பள்ளி திறக்கப்படும் நாளில் மாணவர் கையில் புத்தகம்
பள்ளி திறக்கப்படும் நாளில் மாணவர் கையில் புத்தகம்
பள்ளி திறக்கப்படும் நாளில் மாணவர் கையில் புத்தகம்
ADDED : ஜூன் 09, 2024 02:21 AM
திருவாடானை, : பள்ளிகள் திறக்கப்படும் அன்றே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க முடிவு செய்யபட்டுள்ளது. திருவாடானை வட்டார கல்வி அலுவலர்கள் கூறியதாவது:
பள்ளிகள் திறப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்பே புத்தகங்கள் பள்ளிக்கு சென்று சேர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டதால் புத்தகங்கள் பள்ளிக்கு அனுப்பும் பணி துவங்கியது.
பள்ளிகள் ஜூன் 6ல் திறக்கப்படும் என்ற அறிவிப்பு முதலில் வெளியானதால் புத்தகங்கள் அனுப்பும் பணி சுறுசுறுப்படைந்தது.
அதன் பின் வெயில் காரணமாக ஜூன் 10ல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தற்போது வகுப்பு வாரியாக புத்தகங்களை பிரிக்கும் பணி நிறைவு பெற்று விட்டது.
10ம் தேதி பள்ளி திறக்கும் நாளில் திருவாடானை தாலுகாவில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் அனைத்து மாணவருக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு விடும் என்றனர்.