ADDED : ஜூன் 16, 2024 04:42 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே துத்தியேந்தல் எல்லை காத்த அய்யனார்,முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக விக்னேஸ்வரர், விநாயகர் பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, முதல் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், கோ பூஜையும் நடந்தது.
யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் கோயில் கோபுரங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின் மூலவர்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.